கத்தோலிக்க மதஸ்தர்கள் யோக்கியதை. குடி அரசு - செய்தி விளக்கம் - 23.07.1933 

Rate this item
(0 votes)

அமெரிக்க கத்தோலிக்க தினசரியிலிருந்து கீழ்கண்ட செய்தியை நியூயார்க் உண்மை நாடுவோர் (Truth seeker) பத்திரிகை பிரசுரித்திருக்கிறது. அதாவது சிங்சிங் ஜெயிலில் உள்ள பலதிறப்பட்ட மதங்களைச் சார்ந்த கைதிகளின் விபரம் கீழ் வருமாறு: 

கத்தோலிக்கர்கள் -                 855 

பிராட்டஸ்டண்ட் -                  518

யூதர்கள் -                                177

கிறிஸ்தவ விஞ்ஞானிகள்  -   20

மகமதியர்கள் -                        2

புத்தர்கள் -                                1

மதமற்றவர்கள் -                      8

                                            1,581 

சிங்சிங் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களில் கால்வாசிப் பேர்களே கத்தோலிக்கர்களாக இருந்தும், நாட்டில் குற்றம் செய்து சிறைக்காவலில் அடைபட்டிருக்கும் (அ) யோக்கியர்களின் கணக்கு 100-க்கு 50-க்கு மேல் ஆகின்றது. ஆனால் மதமற்றவர்களின் கணக்கு 1/2 பர்செண்டேயாகும். மதவெறிக்குத் தகுந்தார்போல் குற்றவாளிகளின் எண்ணிக்கை விபரம் காணப்படுவதை வாசகர்கள் கவனிப்பதோடு, மதம் மக்களை யோக்கியப் பொருப்பற்றவர்களாக்கவே பயன்படுத்துகிறதென்பதையும் இதுசமயம் ஞாபகப் படுத்திக் கொள்ளவும் விழைகின்றோம். 

குடி அரசு - செய்தி விளக்கம் - 23.07.1933

Read 53 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.